Ticker

6/recent/ticker-posts

அலரி மாளிகைக்கு முன்னால் தேங்காய் உடைத்த ஊடகவியலாளா்கள்

டகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போய் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
கடந்த 5 வருடங்களாக அவருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியாத அதிகாரிகள் அவர் காணாமல் போனது குறித்து பல்வேறு வியாக்கினங்களை கூறி வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், பிரகீதின் மனைவியான சந்தியா எக்நேலியகொட , பிரகீத் எக்நேலியகொடவை தேடி தருமாறு கோரி அனைத்து இடங்களுக்கு சென்று வந்துள்ளதாலும் அவரை தேடிக் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், தனது கணவரை தேடித் தருமாறு வலியுறுத்தி, சந்தியா நேற்று ஜனாதிபதி வசித்து அலரி மாளிகைக்கு எதிரில் சென்று தேங்காய் உடைத்துள்ளார்.
இதில் சந்தியா எக்நேலிய கொடவுடன் அவரது மகன் சஞ்சய எக்நேலியகொட உட்பட ஊடகவியலாளர்கள், அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டன

Post a Comment

0 Comments