Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணம் செல்லும் பிரதமர் மோடி!


இலங்கை பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டிருப்பதாக அறிய வருகிறது.  இலங்கை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன இம்மாதம் 16ம் தேதி இந்தியா செல்கிறார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வடக்கு மாகாணத்திற்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது. 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அவர், அங்கு இந்தியா மேற்கொண்டுள்ள உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை பார்வையிட இருக்கிறார்.  தமிழ் மக்களுக்கு இந்தியா சார்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டப் பணிகளையும் அவர் பார்வையிட இருக்கிறார். அதுதவிர, தமிழக மீனவர் விவகாரம், 13வது அரசியல் சட்டத் திருத்தம் போன்றவை குறித்து இலங்கை அரசுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று  தெரிய வருகிறது.

Post a Comment

0 Comments