Ticker

6/recent/ticker-posts

பாகிஸ்தானின் ஏவுகணை சோதனை வெற்றி !

பாகிஸ்தானில், முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை, அந்நாட்டு விஞ்ஞானிகள் விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளனர்.  எதிரிப் படைகளை குறிவைத்து தாக்கும் வகையிலான ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில், பாகிஸ்தானை சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். 

இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, 350 கி.மீ., தொலைவிலான இலக்கை மிகத் துல்லியமாக தாக்கும் வகையிலான ஏவுகணையை விஞ்ஞானிகள் உருவாக்கினர். கடலிலிருந்து கப்பல் மூலம் செலுத்தும் வகையிலான இந்த ஏவுகணையின் உதவியால், தரை மற்றும் தண்ணீரில் எதிரியின் இலக்கை எளிதில் தாக்க முடியும். 

இவ்வகை ஏவுகணைகளை ஒரு சில நாடுகள் மட்டுமே தயாரித்துள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. 

Post a Comment

0 Comments