Ticker

6/recent/ticker-posts

ஐ.எஸ். ( IS) இஸ்லாத்தைப் பற்றி கரிசனை காட்டாத ஒரு அமைப்பாகும் - பிரான்ஸிய ஊடகவியலாளா் பிரன்கொய்ஸ் Francois


இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) என்ற பெயாில் இயங்கும் தீவிரவாதக் குழு இஸ்லாம் மதத்தை பற்றி அதிகம் கரிசனை காட்டும் ஒரு அமைப்பல்ல. அவர்களிடம் அல்குா்ஆன் பிரதி ஒன்று கூட இருக்கவில்லை. அது வெறுமனே ஒரு அரசியல் அமைப்பாகும் என்று ஐ.எஸ். தீவிரவாதக் கும்பலின் பிடியில் 10 மாதங்கள் சிறைப்பட்டு இருந்து விடுதலையான 53 வயதான பிரான்ஸ்  ஊடகவியலாளர் டிடியர் பிரான்கொயிஸ் Didier Francois குறிப்பிட்டுள்ளார்.
அவா்கள் இஸ்லாம் தொடா்பாக கதைக்கவே மாட்டாா்கள். வெறுமனே அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு குழுவே இந்த ஐ.எஸ் தீவிரவாதக் குழு என்று டிடியர் பிரான்கொயிஸ் கூறியுள்ளார்.

குர்ஆன்  கற்பிக்கும் போதனைகளுக்கு நம்பிக்கைகளுக்கு  முரணான செயற்பாடுகளே அவா்களிடமிருக்கின்றன.  ஏனென்றால் அவா்களின் செயற்பாடுகளுக்கான எந்த ஆதாரமும் குர்ஆனில் இல்லாதவையாகும். குா்ஆனின் போதனைகளுக்கு எதிராகவே அவா்கள் செயற்படுகின்றனா்.  அவர்களிடம் குர்ஆன் பிரதி ஒன்று கூட இருக்கவில்லை. எமக்கு குர்ஆன் ஒன்றை தருவதற்கும் அவர்கள் விரும்பவில்லை"  என்று பிரான்கொயிஸ் ஊடகங்களுக்கு தொிவித்துள்ளாா்.

தான் தடு த்துவைக்கப்பட்டிருந்த காலத்தில் நம்பமுடியாத கொடுரங்களை கண்டதாகவும் அவர் விபரித்துள்ளார்.  ஐ.எஸ். அமைப்பிலுள்ள பிாித்தானிய பிரஜைகள் மிகவும் கொடுரமானவா்கள் என்று வா்ணித்த பிரன்கொய்ஸ், ஜிஹாதி ஜோன் என்று ஐ.எஸ். அங்கத்தவா்களால் அழைக்கப்படும் பிரித்தானிய பிரஜை மிகவும் மோசமானவா் என்றும் வீடியோக்களில் வருகின்ற கழுத்தறுப்பு கொலைகளை இந்த பிாித்தானிய பிரஜையான ஜிஹாதி ஜோனே செய்து வருவதாகவும் குறிப்பிட்டாா். 

Post a Comment

0 Comments