நாட்டை
காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தம் என்னிடம் கிடையாது. பல்வேறு தரப்பினருடனும்
நான் ஒப்பந்தங்கள் செய்யவில்லை. என்னிடம் உள்ள ஒரேயொரு ஒப்பந்தம் மஹிந்த
சிந்தனை மாத்திரமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
உலகை வெல்லும் வழி என்ற தொனிப்பொருளில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,
நாட்டை காட்டிக்கொடுப்பதா? முன்னோக்கிச் செல்வதா? அல்லது பின்னோக்கிச் செல்வதா? என மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
அபிவிருத்தியுடன் கூடிய சுத்தமான நாட்டை நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.
தேர்தல் வாக்குறுதிகள் என்பது சில மாதங்களில் மறக்கப்பட்டுவிடும் ஆவணம் எனும் நிலைப்பாட்டை நான் மஹிந்த சிந்தனையூடாக மாற்றியமைத்தேன். கிராமப்புறங்கள் அனைத்தும் உட்கட்டமைப்புடன் கூடிய வசதிகளை செய்துகொடுத்துள்ளோம்.
வடக்கு,கிழக்கு,தெற்கு,மேற்கு என அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்ட மரண பயம் இப்போது இல்லை. இனியும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துகிறேன்.
எமது தேசிய சொத்துக்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
நாம் ஆரம்பித்த பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இடைநிறுத்த இடம்கொடுக்க முடியாது. அந்தப் பொறுப்பு என்னிடமே உண்டு.
நாட்டை காட்டிக்கொடுக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் என்னிடம் கிடையாது.
ஜனாதிபதி: என்னிடம் பல்வேறு தரப்பினருடனான ஒப்பந்தங்கள் கிடையாது. என்னிடம் உள்ள ஒரேயொரு ஒப்பந்தம் மஹிந்த சிந்தனை மாத்திரமே எனத் தெரிவித்தார்.

0 Comments