Ticker

6/recent/ticker-posts

மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம் அனுசரிப்பு

மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம் இன்று இந்தியாவில்
அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோரும் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதுதவிர, நாடு முழுவதும் காந்தி நினைவு நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

Post a Comment

0 Comments