தம் நாட்டு விமானியை இஸ்லாமிய தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடித்து வைத்துள்ளதை உறுதிப்படுத்தும் எந்த வித சாட்சிகளும் தமக்கு கிடைக்கவில்லை என ஜோர்தான் அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் தம் நாட்டுப் பிரைஜ உயிருடன் இருப்பதற்கான எதுவித ஆதாரமும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் ஜோர்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பெண்ணை
விடுவிக்க முடியாது என ஜோர்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் விமானி Lt Moaz al-Kasasbeh இன் குடும்பத்தினர் தெரிவிக்கையில், தமது மகன் உயிருடன் இருப்பது வெளிப்படையாக தெரிவதாகவும் ஜோர்தான் அரசு, இஸ்லாமிய தீவிரவாதிகள் கொடுத்த காலக்கெடுவை வீண் விரயம் செய்வதால் தமது மகனின் உயிருக்கு ஆபத்து நெருங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தம் நாட்டு பணயக் கைதியை இஸ்லாமியத் தீவிரவாதிகளிடமிருந்து உயிருடன் மீட்க அவர்களால் முன்வைக்கப்பட்ட நிபந்தனையை ஜோர்தான் அரசு ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments