யாழ்.பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களை வெளியேறுமாறு கோரி யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
முன்னாள் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் பல்கலைக்கழக பேரவை உருவாக்கப்பட்டது.
இந்த பல்கலைக்கழக பேரவை யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் பிரச்சினைக்கு செவி சாய்க்கவில்லை என தெரிவித்தே அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அத்துடன், குறித்த பணிப்புறக்கணிப்பு இன்று சனிக்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments