Ticker

6/recent/ticker-posts

இடதுசாரிகளுடன் கூட்டணி சேரும் ஈ.பி.டி.பி

ழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென் பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தவிர ஏனைய எந்த கூட்டணியானாலும் அதனுடன் இணைந்து போட்டியிட தயார் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகளுடன் ஈ.பி.டி.பி கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருவதால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஈ.பி.டி.பி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments