இலங்கை விமான சேவையின் (Srilankan airlines) புதிய தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே இப்பதவியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான நிசாந்த விக்ரமசிங்க பதவி விலக்கப்பட்டு, அவரது இடத்திற்கே அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்களின் இயக்குநராகவும், பிரித்தானியாவின் ஆடையுற்பத்தி நிறுவனம் ஒன்றுக்கு தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.
அத்துடன், முன்னாள் சுதந்திர வர்த்தக வலய தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.
ஏற்கெனவே இப்பதவியில் இருந்த மஹிந்தவின் மைத்துனர், இலங்கை விமான சேவையை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்ததாகவும், தன்னிச்சையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் இதனால் பாரிய நட்டம் ஏற்பட்டதாகவும் பல விமர்சனங்கள் நிலவிவந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments