Ticker

6/recent/ticker-posts

லசந்த, ரவிராஜ், ஜோசப், ஜெயராஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் படுகொலைகள் குறித்து மீள விசாரணை

ண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், முன்னாள் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஆகியோர்
உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் படு கொலைகள் குறித்து மீள விசாரணை நடத்தப்பட உள்ளது.
புதிய அசராங்கத்தின் கீழ் இந்தப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அரசாங்க ஆதரவுடன் இந்தப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.  இந்தக் கொலைகள் தொடர்பில் மீளவும் ஓர் தடவை விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சகல தகவல்களும் திரட்டப்பட்டு உள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் கைதுகள் செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகளை யார் செய்தார்கள் எவ்வாறு செய்தர்கள் என்பது பற்றிய தகவல்கள் தமக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று ஜோசப் பரராஜசிங்கம், தேவாலயத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதுடன், 2006ம் ஆண்டு கொழும்பில் வைத்து நடராஜா ரவிராஜ் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக அப்போதைய மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
எனினும், இந்தக் கொலைகளுடன் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
2008ம் ஆண்டு வெலிவேரிய பிரதேசத்தில் வைத்து மரதன் ஓட்டப் போட்டியொன்றை ஆரம்பித்து வைக்கச் சென்ற போது அப்போதைய பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டு வந்த போதிலும், இந்தக் கொலை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.    2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி லசந்த விக்ரமதுங்க அத்திட்டிய பிரதேசத்தில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அரசாங்கம் ஒரு நாள் தம்மை படுகொலை செய்யும் என ஆசிரியர் தலையங்கம் எழுதி வைத்திருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இந்தக் கொலைத் தொடர்பில் நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் கொலையாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.

Post a Comment

0 Comments