Ticker

6/recent/ticker-posts

இராணுவப் புரட்சிக்கான சதி நடந்ததாக கூறப்படுவது வேடிக்கையான விடயம் : உதய கம்மன்பில

னாதிபதித் தேர்தலுக்கு மறுநாள் இராணுவப்புரட்சி ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் கதையில் எந்தவித உண்மையும் இல்லை. அவ்வாறு கூறப்படுவது வேடிக்கையான விடயம் என பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினத்தன்று இரவு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நான் உட்பட சிலர் அலரி மாளிகையில் இராணுவப்புரட்சியை ஏற்படுத்துவதற்கு சதி செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஐ.ம.சு.மு. அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டால் நாட்டில் வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்காக ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை குறித்தே நாங்கள் கலந்துரையாடினோம் என்றும் கம்மன்பில கூறினார்.
பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள தருணத்தில் அமைதியான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் நோக்கிலேயே எங்கள் கலந்துரையாடல் அமைந்து என்றும், இவ்விடயம் தொடர்பில் விரைவில் ஊடகங்களுக்கு அறிவிப்பேன் என்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் கம்மன்பில அறிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments