Ticker

6/recent/ticker-posts

முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸார்!

முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்திற்குள் நேற்றிரவு 7மணியளவில் அத்துமீறி நுழைந்த பொலிஸாரும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் அலுவலகத்தை எவ்வித நீதிமன்ற அனுமதியும் இல்லாமல் சோதனையிட்டனர்.
பொலிஸாரும், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசிக்க முற்பட்ட போது கட்சியின் உறுப்பினர், இல்லை நீங்கள் இங்கு உட்காருங்கள், அதன் பின் உங்களது
கேள்விகளுக்கு விடையளிக்கிறோம் என்று சொல்லி முடிவதற்குள் பொலிஸாரும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளும் அலுவலகம் முழுவதையும் சோதனையிட ஆரம்பித்தனர்.
அப்போது அசதியால் உறங்கிக் கொண்டிருந்த கட்சியின் உறுப்பினர் ஒருவரின் போர்வையை இழுத்து அவரை அடையாளம் காண முற்பட்டனர்.
அப்போது  அருகில் இருந்த கட்சியின் சக தோழர் அவர் தூக்கத்தில் இருக்கின்றார். அவரை இடையூறு செய்ய வேண்டாம். என்று கூறியதற்கு இல்லை நாங்கள் இங்கு உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி தூக்கத்தில் இருந்த தோழரை பலவந்தமாக எழுப்பினர்.
அலுவலகத்தில் அவ்வேளையில் இருந்த கட்சி உறுப்பினர்கள் மூவரையும் பலவந்தமாக அழைத்து குமார் குணரத்னம் பற்றி பல கேள்விகளைக் கேட்டார்கள்.அநாகரீகமாக நடந்துகொண்டார்கள். உங்களது அத்துமீறல் பிழையானது என்று கூறிய கட்சி தோழரை கைது செய்து சிறையில் அடைப்போம் என்று எச்சரித்தார்கள்.
அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றை இப்படியாக அத்துமீறி சோதனையிடும் போது நாட்டில் உள்ள சாதாரண மக்களின் நிலை என்னவாக இருக்கும்? இதுதான் மைத்திரியின் நல்லாட்சி!
வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளோர் மற்றும் ஊடகவியலாளர்கள், மாற்று சிந்தனையாளர்கள் அனைவரையும் இவர்கள் நாட்டிற்கு திரும்ப அழைப்பது அனைவரையும் ஒட்டு மொத்தமாக கைது செய்து சிறையில் அடைப்பதற்கேயாகும்.
அதன் ஆரம்பமே குமார் குணரத்னத்தை நாட்டில் அரசியலில் ஈடுபட அனுமதிக்காமையாகும்.
இந்த அரசாங்கத்திற்கும் கடந்த அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவித வேறுபாடும் கிடையாது.
இருவருமே கபடத்தனமான வஞ்சகமான மனிதர்களை வதைக்கின்ற சிறையில் அடைக்கின்ற கொலை செய்கின்ற அரக்கர்களே இவர்கள்.
இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments