Ticker

6/recent/ticker-posts

மூன்றாவது போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி; மக்கலம், சௌதி அபாரம்



இங்கிலாந்துடன் நடைபெற்ற இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது. ஒன்பதாவது போட்டியாக இடம்பெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து
33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து  123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
சிறப்பாக பந்து வீசிய சௌதி 33 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் 5 விக்கெட்டுக்களுக்கு மேல் பெற்றுக்கொண்ட  மூன்றாவது நியூசிலாந்து வீரர் எனும் பெருமையை பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்திய மக்கலம் 25 பந்துகளில் 77 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார். அத்துடன் உலகக்கிண்ண போட்டிகளில் அதிவேக அரைச்சத சாதனையாக காணப்பட்ட இவரது முன்னைய சாதனையை தகர்த்தெறிந்தார். இவர் 18 பந்துகளில் அரைச்சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து சார்பாக பந்துவீச்சில் வோக்ஸ் மாத்திரம் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அத்துடன் ஸ்டீபன் பின் 2 ஓவர்களில் 49 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிகூடிய ஓவருக்கான ஓட்டத்தை வழங்கியவர் என்ற சோகமான சாதனையையும் படைத்தார்.
ஆட்ட நாயகனாக டிம் சௌதி தெரிவு செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments