Ticker

6/recent/ticker-posts

சசி வீரவன்ச தலை மறைவு !

கடவுச்சீட்டு மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தனது வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக குற்றப்புலனாய்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

சசி வீரவன்சவை கைது செய்ய இரகசிய பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை அவரது கடுவெல இல்லத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் பொலிஸார் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சசியை கைது செய்வதற்கு ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சசி வீரவன்ச, .ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இருவேறு கடவுச்சீட்டுக்களை போலியான தகவல்களை வழங்கி பெற்றுக் கொண்டிருந்தமை நிரூபணமாகியுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
ஊழல்களுக்கு  எதிராக குரல் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய மைத்திாி அரசு ஊழல்வாதிகளை கைது செய்வதில் தாமதம் காட்டுவதாக ஜேவிபி போன்ற அரசியல் கட்சிகளும், வாக்களித்த மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனா். 
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டு  பலவாரங்கள் கடந்து சசிவீரவன்சவை கைது செய்ய அவரது வீட்டுக்கு இரகசிய பொலிஸாா் சென்றிருப்பதும் அவா் அங்கிருந்து தலைமறைவாகியிருப்பதும்  மக்கள் மத்தியில் சந்தேகத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

0 Comments