வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மார்ச் மாதம் 2ம் திகதி ஜெனிவா செல்ல உள்ளார்.
அங்கு நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 65 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த உயர்நிலைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கே, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா செல்லவுள்ளார். அங்கு அவர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயித் ராத் அல் ஹுஸைனையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் அறிய வருகிறது.

0 Comments