இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் வட மாகாண மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்.உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்,அரசாங்க அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனா்.
தத்தமது மாவட்டங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அபிவிருத்திகள், குறைபாடுகள் தொடா்பாக இங்கு ஜனாதிபதி முன்னிலையில் ஆராயப்பட்டிருக்கிறது.
வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினையை பேசுவதற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் ,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் ஆகியோர் இங்கு சமூகமளிக்காதது பெரும் குறையாக கணிக்கப்படுகிறது.
என்றாலும் மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்யும் வட மாகாண சபை முஸ்லிம் உறுப்பினர்களான ரிப்கான் பதியுதீன்.அஸ்மின் ஐயூப், ஜனூபர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனா்.

0 Comments