கொரோனா வைரஸ் பரவுதலுக்கு மத்தியில் சமூக இடைவெளி குறித்த அரசாங்க வழிகாட்டுதல்களை மீறி பாகிஸ்தானில் பல பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை இடம்பெற்றுள்ளதாக அல்ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மதத் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒருமித்த கருத்து இல்லாததன் காரணமாக வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் சில பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றுள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில், நூற்றுக்கணக்கானவர்கள் சிவப்பு பள்ளிவாசலில் (Red Mosque) , கடும் போக்கு மதத் தலைவர் அப்துல் அஸீஸ் தலைமையில், தொழுகை இடம்பெற்றதாகவும் அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது..

0 Comments