Ticker

6/recent/ticker-posts

உயிர்த்த ஞாயிறு நினைவு கூரல் தினத்தில் ஊமையான மனிதர்கள்!




























உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நேற்றோடு ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து நாடளாவிய ரீதியில்  நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்தக் கொடுர சம்பவம் இடம்பெற்ற காலத்தில் ஆட்சியதிகாரத்தில் இருந்த முன்னாள்  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன  ஆகியோர் இந்த நினைவு கூரல் நிகழ்வுகளில் எதிலும் கலந்து கொள்ளாமல்  இருந்ததோடு இவர்கள் இது தொடர்பாக ஒரு வார்த்தையேனும் பேசாமல் மௌனம் காத்தது இன்று அரசியல் அரங்கில் பேசு பொருளாய் ஆகியிருக்கிறது.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்லாமல், ஜாதிக ஜனபலவேகய கட்சியின்  தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தாக்குதலைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தாக்குதல் தொடர்பாக பல ஆரம்ப எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இந்த சம்பவத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தாக்குதல் நடந்த நேரத்தில், மைத்ரிபால சிறிசேன யாரிடமும் சொல்லாமல் சிங்கப்பூருக்கான விஜயம் ஒன்றை  மேற்கொண்டிருந்தார். இருப்பினும், தாக்குதல் இடம்பெற்ற உடனே அவர் நாடு திரும்பாமல் ஒரு சில தினங்களின் பின்னரே நாடு திரும்பினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்த பாராளுமன்றத் தெரிவுக் குழு விசாரணைகளின் போது  ஜனாதிபதியாக இருந்த சிறிசேன தனது பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்றவில்லை என்ற தகவலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments