Ticker

6/recent/ticker-posts

குவைத் இலங்கை தூதரகம் முன் போராட்டம்!



விசா இல்லாமல் குவைத்தில் தங்கியுள்ள சுமார் 400 இலங்கையர்கள் குவைத்திற்கான இலங்கை தூதரகம் முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் குவைத் கடுமையான சட்டங்களை விதித்துள்ளது. அந்த விதிகளையும்  மீறி இலங்கையர்கள் இவ்வாறு குவைத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

விசா இல்லாமல் குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு குவைத் அரசு ஒரு பொது மன்னிப்பு காலத்தை  வழங்கியுள்ளதுடன், இலங்கைக்குத் திரும்புவதற்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கவும் இணங்கியுள்ளது.  அதற்காக இலங்கை தூதரகத்திலிருந்து ஒரு கடிதத்தைக் கொண்டு வருமாறு குவைத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த கடிதத்தைப் பெறுவதற்காக  பல நாட்களாக அலைந்து திரிவதாக கூறிய உள்ள இலங்கையர்கள், நேற்று அதிகாலை  முதல் தூதரகத்தில் முன்பாக காத்திருந்த போதும் அவர்களின் கோரிக்கைக்கு இலங்கை தூதர அதிகாரிகள் ஒழுங்காக பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளனா்.

Post a Comment

0 Comments