சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதிகள், கணக்காய்வாளர்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் ஆகியோர் விசாரணைக் குழுவில் உள்ளடக்கப்படுவார்கள் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டார்.
நிறுவனத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான சிபாரிசுகளை இந்தக் குழு அமைச்சரிடம் கையளிக்கவுள்ளது.
இதன் பின்னர் உரிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
அத்துடன், உணவுத் திணைக்களம் உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

0 Comments