Ticker

6/recent/ticker-posts

மைத்திரி பெப்ரவரி 11 இல் இந்தியாவிற்கு விஜயம்



னாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரச பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் இதற்கு பின்னரான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதலாவது பயணமாக ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ளார். அதன்படி அவர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments