தனது பதவியை இராஜினாமா செய்த காலி - வாதும்பர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பனங்கல லியனகே கீர்த்திசிங்க, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்காக அமைக்கப்பட்ட மேடை ஒன்று சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து பனங்கல லியனகே கீர்த்திசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு தற்போது முதுகை நிமிர்த்தி வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையினாலேயே தனது சீருடையை கழற்றி வைத்து விட்டு வீடு செல்வதாக அப்போது அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments