இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமது தலைமைத்துவத்தில், முதல் பின்னடைவைச் சந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி சட்டமன்றத் தேர்தலில், அவரது பாரதிய ஜனதா கட்சி தோல்விகண்டுவருவதை, முதற்கட்ட கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
வாக்களிப்பு நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, ஐந்து கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
டில்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக் கட்சி, திரு மோடியின் பாரதிய ஜனதா கட்சியைக் காட்டிலும், அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதை, அந்தக் கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
கெஜ்ரிவாலின் கட்சி அலுவலகத்திற்கு வெளியே, ஆம் ஆத்மிக் கட்சி உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் திளைத்திருந்ததையும், இனிப்புகள் வழங்கியதையும், உள்ளூர்த் தொலைக்காட்சிகள் காட்டின. திரு கெஜ்ரிவால், தமது வாக்காளர்களிடம், இணையத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார். நேற்று நடைபெற்ற தேர்தலுக்கான அதிகாரபூர்வ முடிவுகள், நாளை மறுநாள் வெளியிடப்படும்.

0 Comments