Ticker

6/recent/ticker-posts

மலேசியா விமான விபத்து: துணை பைலட் உடல் மீட்பு

மலேசியாவுக்கு சொந்தமான ஏர்ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28–ந் தேதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றது. அப்போது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 162 பயணிகளும் பலியானார்கள்.

விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டது. பல பயணிகள் உடல்களும் மீட்கப்பட்டன. விமானத்துக்குள்
பிணமாக கிடப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 101 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீட்பு குழுவினர் விமானத்தில் பைலட்டுகள் அமரும் முன் பகுதியை கண்டுபிடித்தனர். அதற்குள் சென்று தேடிய போது ஒரு உடல் கிடைத்தது. அது சிதைந்த நிலையில் இருந்தது. உடலில் பைலட்டுகள் அணியும் சீருடை இருந்தது. எனவே இது துணை பைலட் ரெமி பலேஷல் உடலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. பிரான்சு நாட்டை சேர்ந்த இவர் இந்த விமானத்தில் துணை பைலட்டாக பணியாற்றி வந்தார்.

மற்றவர்கள் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments