Ticker

6/recent/ticker-posts

மங்கள இன்று பிரித்தானியா விஜயம்

வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். 

இன்று அதிகாலை அவர் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

சில நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், அந்த நாட்டின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளார். 

மேலும் இதனையடுத்து அவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவும், அந்த நாட்டின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும்
தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின், உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்லவுள்ளார். 

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும், வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். 

Post a Comment

0 Comments