இந்தியா டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 5 நாட்களே உள்ளநிலையில் கிறிஸ்தவ ஆலயம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு நேற்று இரவு நுழைந்த இனம்தொியாத நபர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இச்சம்பவம் இரவு 1 மணியளவில் நடந்துள்ளது.
வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. இருப்பினும் இதுவரையில் முறைப்பாடுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கிறஸ்தவ ஆலயத்தின் சுற்றுசுவரை ஏறிகுதித்து பிரதான வாசலை திறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 Comments