Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு : விமான சேவைகள் ரத்து


அமெரிக்காவின் சிக்காகோ மற்றும் நியு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிககோவில் மட்டும் ஆயிரத்து 400க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த வாரம், பாஸ்டன், நியுயார்க், பிலடெல்ஃபியா ஆகிய இடங்களில் கடுமையாக பனி பொழிந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது. இரண்ட நாட்களில் குறைந்திருந்த பனியின்  தாக்கம் தற்போது சிகாககோ, நியு இங்கிலாந்து ஆகிய இடங்களில் அதிகரித்துள்ளது. 

சிகாகோ சாலைகளில் 2 அடிக்கும் அதிகமாக பனிபடர்ந்துள்ளது. சாலைகளில் நிறுத்தப்பட்டருந்த வாகனங்களில் பனிமலை போல கொட்டியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மீட்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சாம்ப்பெயின், இலினாய்ஸ் ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர். மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றினால், 20 ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சிகாகோவின் நெப்ரஸ்காவிலிருந்து தென் டக்கோட்டா வரை மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. பனிபொழிவு அதிகரித்த காரணத்தால், அமெரிக்கா முழுவதிலும் 2 ஆயிரம் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

சிகாகோவில் மட்டும் 2 ஆயிரத்து 100 விமானங்களின் புறப்பாடு தாமதமாயின என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டெட்ராய்ட், பாஸ்டன்,  ரோட் ஐலாந்து ஆகிய இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.கிளவ்லாந்து, ஓஹியோ, நியுயார்க் மற்றும் பாஸ்டனில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என்றும் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

Post a Comment

0 Comments