சிரியாவில் லெபனானைச் சேர்ந்த, யாத்ரீகளூக்கான பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். லெபனானில் இருந்து சிரிய தலைநகர் டமாஸ்கசில் உள்ள வழிபாட்டு தலத்துக்கு 50 பேரை சுமந்து கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து டமாஸ்கசில் உள்ள வழிப்பாட்டுதலத்தை அடைந்ததும் பேருந்தில் குண்டு வெடித்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த யாத்ரீகர்கள், 6 பேர் பலியாயினர். மேலும் 23 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் கொய்தாவுடன் தொடர்புடைய நுஸ்ரா முன்னணி பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளே தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

0 Comments