நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் சட்டத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமது அமைச்சின் கீழ் வரும் முக்கிய நிறுவனங்களுக்கு உரிய உயர் பதவிகள் சில வற்றுக்கு நியமனங்களை வழங்கியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக ரஞ்சித் பெர்னான்டோவும், அதன்பணிப்பாளர் நாயகமாக நயனமாவில்மட மற்றும் அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளையில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவராக பொறியியலாளர் மடவளை கே.ஏ. அன்சார் (அலாவுதீன்) அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதோடு அதன் செயலாற்று பணிப்பாளராக பி.ஐ.ரி. மஹிலால் சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளார்;.
நிலமறு சீரமைப்பு அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களைஅமைச்சர் ஹக்கீம் திங்கட்கிழமைமுற்பகல் (02) தமதுஅலுவலகத்தில் வழங்கிவைத்தார்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
ஊடகச் செயலாளர்



0 Comments