சர்ச்சைகளுக்கு பெயர்போன இந்திய நடிகை ராக்கி சாவந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பதித்த ஆடை அணிந்து புதிய சர்ச்சையில் சிக்கினார். அந்த சர்ச்சைக்கு இப்பொழுது அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள சிக்காகோவில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற ராக்கி சாவந்த் கருப்பு நிற உடையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பதித்த ஆடை அணிந்திருந்தார். அந்த ஆடையில் மோடியின் கை ராக்கி சாவந்தின் மார்பகத்தில் படும்படியாக அந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆடையின் பின்புறத்தில் ராக்கி சாவந்தின் இடுப்பு பகுதிக்கு கீழே மோடியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.
ராக்கி சாவந்தின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல தரப்பிலிருந்தும் ராக்கி சாவந்திற்கு கண்டனக்கள் குவிந்தன.
இது குறித்து Firstpost என்னும் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு ராக்கி சாவந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் பிரதமர் மோடியின் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டுள்ளேன். அவர் மிகச் சிறந்த பிரதமர், அமெரிக்காவில் அவர் சார்பாக நானே பிரதிநிதியாக செயல்படுகின்றேன். நான் மக்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், நான் அணிந்த ஆடையை பற்றி விமர்சனங்கள் தெரிவித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம், அதற்கு பதிலாக உங்களுடைய குடும்பங்களை கவனித்துக்கொள்ளுங்கள். சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவது, விவசாயிகள் தற்கொலை போன்ற பல முக்கிய பிரச்சனைகள் இந்தியாவில் உள்ளன. எனவே அது குறித்து பேசுங்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும் “நான் பாஜகவின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த ஆடையை அணிந்தேன். அதிலும் குறிப்பாக நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆடையை அணிந்தேன். ராஜ்நாத் சிங் எனக்கு நன்கு பழக்கமானவர், அவர் என்னை அவரது மகளாக பாவிப்பவர். அவரை நான் டெல்லியில் சந்தித்துள்ளேன் மீண்டும் அவரை சந்திக்க உள்ளேன். நான் பாஜகவின் மகள், மோடி எனது கனவு மனிதர், அவர் பிரதமராக இருப்பதில் நான் மிகுந்த மசிழ்ச்சி அடைகிறேன், அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர்தான் பிரதமராக இருப்பார். நான் பாஜகவில் இணைய ஆசைபடுகின்றேன். எதிர்காலத்தில் பாஜகவில் இணைந்து கட்சிக்காக பணி செய்யவும் ஆசைபடுகிறேன்” என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மோடியின் உருவம் பதித்த இந்த ஆடையை ஏலத்தில் விட்டு அதில் வரும் பணத்தில் அனாதை இல்லங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவ போவதாக ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

0 Comments