ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமல் செய்தது தொடர்பாக கைதாகியிருக்கும் சந்தேக நபரின் பிள்ளை மன அழுத்தங்களுக்கு உள்ளாகி கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
11வயதையுடைய இந்த சிறுமி தனது தந்தையை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கேட்டு அழுவதாகவும், தந்தையை காணாமல் இந்ந நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எக்னெலிகொட விவகாரம் தொடர்பாக இதுவரை 8 இராணுவ மற்றும் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சிறுமியின் மன அழுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள சுகவீனத்தை போக்குவதற்க மருத்துவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய வரும் வேளையில், எக்னலிகொட காணாமல் போனபோது அவருக்கும் 14 வயதுடைய ஒரு மகன் இருந்ததாகவும் அவருக்கும் இன்று வரை இதே நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அறிய வருகிறது.
எக்னெலிகொட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பவர்களை தியாகிகளாக சித்தரிக்க முயற்சி செய்யும் எதிர்தரப்பினர் எக்னலிகொடவின் பிள்ளைகள் பற்றியும் அவர்களின் மன உளைச்சல் பற்றியும் கதைக்காமல் இருப்பதன் பின்னணியில் இனவாத அரசியலே காரணமென்று அறிய வருகிறது.

0 Comments