இந்தியாவிலுள்ள யமுனை நதிக்கரையை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரில் வாழும் கலை அமைப்பிற்கு ரூ.120 கோடி அபராதம் விதிக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
வாழும் கலை அமைப்பின் சார்பில் யமுனை ஆற்றங்கரையில் நடைபெற்ற உலக கலாச்சார திருவிழாவின் போது யமுனை நதிக்கரை படுக்கையை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்தது. உலக கலாச்சார திருவிழா தொடங்குவதற்கு முன்னதாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், சுற்றுச்சூழல் சேதத்திற்கான இழப்பீடாக ரூ.5 கோடி செலுத்த வாழும் கலை அமைப்புக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தவிடப்பட்டது.
ரூ.25 லட்சம் மட்டும் முன்பணமாக செலுத்திய வாழும் கலை அமைப்பு, திருவிழாவை நடத்தியது. மீதப்பணமான ரூ.4.75 கோடியை கடந்த ஜூன் மாதம் செலுத்தியது. இந்நிலையில், யமுனை ஆற்றங்கரையில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இக்குழு தனது அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் அளித்தது. அதில், வாழும் கலை அமைப்பின் உலக கலாச்சர திருவிழாவின் போது யமுனை நதிப்படுகை மோசமான வகையில் சேதப்படுத்தப்பட்டதுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வாழும் கலை அமைப்பிற்கு ரூ.120 கோடி அபராதம் விதிக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, வாழும் கலை அமைப்பு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments