Ticker

6/recent/ticker-posts

தேவாலயத்தை பூட்டி விட்டு உள்ளே ஈஸ்ட்டர் ஆராதனை! பொலிஸார் முற்றுகை!

பாரிஸ் நகரில் தேவாலயம் ஒன்றில் அனுமதி இல்லாமல் இரவு நேர ஈஸ்ட்டர் ஆராதைனை இடம்பெற்றுள்ளது. 
 
ஈஸ்ட்டர் ஆராதனைக்கு பாரிஸ் நகரில் உள்ள ஒரு சில தேவாலயங்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நகரில்  5 ஆம் வட்டரத்தில் உள்ள Saint-Nicolas du Chardonnet தேவாலயத்தில் நள்ளிரவு ஈஸ்ட்டர் ஆராதனை இடம்பெற்றுள்ளது. தேவாலயத்துக்குள்ளே இருந்து சத்தம் எழுவதாக அருகில் வசிக்கும் மக்கள்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 
 
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் தேவாலயத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். தேவாலயத்தின் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில், உள்ளே நாற்பது பேர் ஆராதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் தேவாலயத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றினர். மேலும் இந்த ஈஸ்ட்டர் ஆராதனைக்கு ஏற்பாடு செய்தவர் மீது காவல்துறையினர் தண்டமும் விதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments