Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கை மீறியவர்களுக்கு தண்டணை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை?

ஊரடங்கு சட்டத்தை மீறி வீதியில் நடமாடிய நான்கு பேருக்கு தண்டணை வழங்கிய இரண்டு பொலிஸ் உத்யோகத்தர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.


ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில்  இரண்டு நபர்களுக்கு மருதானை கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் தண்டணை வழங்கியிருந்தனர். 

கொழும்பு நகரில்  கடமையில் இருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸாரே இவ்வாறு பணி இடைநீக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கட்டளையை மீறியமை, அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்து கொண்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments