( ஐ. ஏ. காதிர் கான் )
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கைப் பிரஜைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என, அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கைப் பிரஜைகளை வைத்தியசாலைகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலும் அனுமதித்து, அவர்களுக்கு சிறந்த முறையில் உரிய சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.
அத்துடன், இலங்கைத் தூதரகம், இலங்கை துணைத் தூதரகத்தின் பொது அலுவலகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், நலன்புரி அமைப்புக்கள் மற்றும் பிற சமூக, மத அமைப்புக்கள் ஆகியவை, இலங்கை நாட்டினருக்கு உலர் உணவு மற்றும் பிற தேவைகளை வழங்கி வருகின்றனர்.
எனவே, இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கைத் தூதரக பொது அலுவலகம் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் நம்புமாறும் அங்குள்ள இலங்கைத் தூதரகம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.

0 Comments