உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு சென்னை அப்பொலோ வைத்தியசாலையும் தாத்ரி அமைப்பும் இணைந்து ஸ்டெம் செல் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினர். சென்னையில் முதன்முறையாக ஸ்டெம் செல் தானம் அளிப்பவரையும், பெறுபவரையும் ஒன்றாக இணைக்கின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை அப்போலோ வைத்தியசாலை மற்றும் தாத்ரி அமைப்பினர் நடத்தினர்.
சென்னையை தளமாகக் கொண்டு இயங்குகின்ற தாத்ரி, 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சமூக சேவை அமைப்பாகும். லூக்மியா, லிம்போமிய போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை காக்கும் அமைப்பாகவும் தாத்ரி செயல்பட்டு வருகின்றது. இரத்த ஸ்டெம் செல் தானமாளிப்பவர்களுக்கான இந்தியாவின் மிகப் பெரிய பதிவகமாக தாத்ரி திகழ்கின்றது.
இரத்த புற்று நோயியல் நிபுணரான டொக்டர்.ரேவதி ராஜ் நிகழ்ச்சி குறித்து கூறும் போது, புற்று நோய் என்றாலே அச்சமும், தவறான எண்ணங்களும் இருப்பது இன்னும் ஓரளவிற்கு தொடர்கின்றது. இதற்கான சிகிச்சை நடைமுறைகள் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதன் வழியாக புற்று நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

0 Comments