Ticker

6/recent/ticker-posts

#இஷாரா_செவ்வந்தி கைது!


‘கெஹெல்பத்தர பத்மே’ என்ற பாதாள உலக கும்பலின் நெருங்கிய நபர்களாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஐந்து போ் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

பாதாள உலக கும்பலின் தலைவனான சஞ்சீவ குமார சமரரத்ன, என்ற ‘கனேமுள்ள சஞ்சீவ’ என்ற நபரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட இஷாரா செவ்வந்தி, கொலை நடைபெற்ற எட்டு மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கனேமுள்ள சஞ்சீவ, பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்றத்தின் உள்ளே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த தாக்குதலை நடத்திய துப்பாக்கி தாரியை அதே நாளில் பொலிசார் கைது செய்திருந்தாலும், இந்தக் கொலைக்கு மூளையாகச் செயற்பட்ட இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றிருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான ‘கெஹெல்பத்தர பத்மே’விடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற செவ்வந்தியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிய வருகிறது.

இந்த கைது நடவடிக்கையை கொழும்பு குற்றப்பிரிவு (CCD) மற்றும் இன்டர்போல் இணைந்து நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனா்.

Post a Comment

0 Comments