உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 12 ஆவது லீக் போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்றுது.
டனடீன் யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய
ஆப்கானிஸ்தான் அணி 233 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
ஆப்கானிஸ்தான் அணி 233 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
ஆப்கானிஸ்தான் அணி 49 தசம் 4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அஸ்கர் ஸ்டெனிக்சாய், அணி சார்பில் அதிக பட்ச ஓட்டங்களாக 54 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் லசித் மாலிங்க மற்றும் எஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களையும் சுரங்க லக்மால் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமானே மற்றும் தில்ஷான் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அணியின் முக்கிய வீரரான குமார் சங்கக்கார ஏழு ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொடுக்க திமுத் கருணாரத்ன 23 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய மஹெல ஜெயவர்த்தன 100 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 44 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய திஸர பெரேரா 47 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதனடிபபடையில் 48.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி வெற்றிப் பெற்றது.
போட்டியின் சிறப்பாட்டகாரராக மஹெல ஜெயவர்தன தெரிவுசெய்யப்பட்டார்.

0 Comments