Ticker

6/recent/ticker-posts

திஸ்ஸவின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டது!

ஐக்கிய தே
சியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்
திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறி, ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக் குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கமைய திஸ்ஸ அத்நாயக்கவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானித்ததாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தீர்மானத்தை திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு உத்தியோகபூர்வமாக கடித மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

Post a Comment

0 Comments