நச்சுப்பொருட்களை கொண்டுள்ள மேகி நூடுல்ஸ்களை அழிப்பதற்கு இந்திய நெஸ்லே நிறுவனம் ரூ.20 கோடி இந்திய ரூபாய்களை செலவிட்டு வருவதாக நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் சந்தையில் உள்ள 27 ஆயிரம் டன் மெகி நூடுல்ஸ்கள், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் வைத்து அழித்து வருகிறது.
இதற்காக, அந்நிறுவனத்திற்கு நெஸ்லே நிறுவனம் 20 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சந்தையில் இருந்து அனைத்து நூடுல்ஸ்களையும் திரும்ப பெற்று கொண்டுவரும் போக்குவரத்துச் செலவு உள்பட அதை அழிப்பதற்கான செலவு மேலும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.
நெஸ்லே நிறுவனத்தின் மெகி நூடுல்ஸில் நச்சுப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து கடந்த மாதம் 5 ஆம் தேதி அதற்கு தடை விதிக்கப்பட்டது. இது வரை இந்தியாவில் இது போன்ற நிலை எந்த உணவு பொருட்களுக்கும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments