உயிருக்கு ஆபத்தான நிலையில் டொக்டர் ஹுஸாம்
காசாவிலுள்ள கமால் அத்வான் (Kamal Adwan) மருத்துவமனையின் இயக்குநரான டொக்டர் ஹுஸாம் அபூ சஃபியாவை, இஸ்ரேலின் நிட்சன் சிறைக்குள் இருக்கும் "ரகேஃபெத்" (Rakefet) நிலத்தடி விசாரணைப் பிரிவில் அவரது வழக்கறிஞர் நாசிர் அவ்தா சந்தித்துப் பேசியுள்ளார்.
2024 முதல் இஸ்ரேலால் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்பட்டுள்ளதாக 'மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்' (Physicians for Human Rights) அமைப்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் நிட்சன் (Nitzan) சிறையிலுள்ள "ரகேஃபெத்" (Rakefet) தடுப்புக்காவல் மையத்திற்கு அவரது வழக்கறிஞர் சென்று பார்த்தபோது, அவரது உடல்நிலை மிக மோசமடைந்திருப்பதாக அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொக்டர் ஹுஸாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அவர் தினமும் தாக்கப்படுவதாகவும், பலமுறை சுயநினைவை இழந்ததாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.
டொக்டர் ஹுஸாம் தனது வழக்கறிஞரிடம் கூறியது:
மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் (The Association of Physicians for Human Rights), அவரை உடனடியாக அந்தப் பிரிவிலிருந்து மாற்ற வேண்டும் என்றும், அவசர மற்றும் சுதந்திரமான மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், எந்தவொரு குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரோடு சேர்த்து அனைத்து மருத்துவர்களையும், சுகாதாரப் பணியாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

0 Comments