Ticker

6/recent/ticker-posts

மாயமான டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

கடந்த ஜூன் 8ஆம் தேதி மாயமான டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சென்னையில் இருந்து கடந்த மாதம் 8-ந் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘டோர்னியர்’ விமானம் 3 பேருடன் மாயமானது. விமானத்தில் இருந்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் கடலோர காவல்படை அதிகாரி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் குறித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 32 நாட்களாக விமானத்தை தேடும் பணிகள் நடந்து வந்தன. 

இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) டோர்னியர் விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக் கடலில் 950 மீட்டர் ஆழத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலோர காவல்படை ஐ.ஜி. சர்மா கூறுகையில், டோர்னியர் விமானத்தை தேடி வந்த நவீன ரக கப்பலான ஒலிம்பிக் கேனியான் கறுப்புப் பெட்டியை கடலில் 950 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்துள்ளது. மீட்கப்பட்டுள்ள அந்த பெட்டி தற்போது கப்பலில் உள்ளது. விமானத்தின் சக்கரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.


Post a Comment

0 Comments