Ticker

6/recent/ticker-posts

அமைச்சர் பௌசியின் நடவடிக்கைக்கு எதிராக மாகாண சபை அங்கத்தவர்கள் கடிதம்!

கொழும்பு 10, மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் வித்தியாலய அபிவிருத்தி தொடர்பாக கல்வியமைச்சும், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்திருக்கின்றது.

 இந்நிலையில், அரசாங்கத்தின்  குறித்த  நிதியுதவியை நிறுத்துமாறும், அரச சார்பற்ற நிறுவனம் வழங்கும் உதவியை மட்டும் பாடசாலை பெற வேண்டும் என்றும்   அமைச்சர் பௌசியும், அவரது புத்திரர் நவ்ஸரும், ஆடை வியாபாரியான பவ்சுல் ஹமீடும் கோரி வருகின்றனர்.

அப்படி அரசாங்கம் வழங்கும் ஏழு கோடி ரூபாய்களை பாடசாலை பெற்றுக்கொண்டால் அரச சார்பற்ற நிறுவனம் குறித்த பாடசாலையில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் செய்ய முன்வராது என்றும்  அவர்கள் அறிவித்த்து இருப்பதாகவும் அறிய வருகிறது.


இது தொடர்பாக இம்மூவரும் கல்வி அமைச்சசுக்கு கடிதம் மூலம் கோரியும் உள்ளனர். ஆனால் அரச தரப்பிலிருந்து இவர்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கப்டடுள்ளது.

தாருஸ்ஸலாம் அரசாங்க பாடசாலை என்பதாலும், அது மேல்மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் செயற்படுவதனாலும் அரசாங்கத்தின் நிதியுதவிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கத்தின் உதவியையும் சேர்த்து, அரச சார்பற்ற நிறுவனமும் தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அறிய வருகிறது.

 அரச சார்பற்ற நிறுவனமாக தன்னை கூறிக்கொள்ளும் அமைச்சர் பௌசியின் ஆலோசனையில் செயற்படும்,    சர்வதேச மேமன் சங்கத்தின் உதவியை மட்டும்தான் பெற வேண்டும்,  அரசாங்கம் தனது அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்ற  இவர்களின் கோரிக்கையை மேல்மாகாண சபை அங்கத்தவர்கள்   எதிர்த்து வருகின்றனர். 

மேல்மாகாண சபை அங்கத்தவர்களான எம். பாயிஸ், அர்ஸாட் நிஸாம்தீன், எம். அக்ரம், ஜயந்த த சில்வா, எஸ். குகவர்தன், ரி. குருசாமி ஆகியோர்  தமது கையொப்பங்களுடன்
 அமைச்சர் பௌசியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து   கடிதம்ஒன்றை மேல் மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைத்தள்ளனர்.

இந்தக் கடிதத்தில் நல்லாட்சி அரசாஙத்தின் கல்வி அபிவிருத்தித் திட்டமான அருகிலுள்ள சிறந்த பாடசாலை திட்டத்தில் தாருஸ்ஸலாம் பாடசாலை கடந்த 2015 செப்டம்பர் மாதம் உள்வாங்கப்பட்டதாகவும் அதற்கான பொறுப்பை மேல் மாகாண சபை ஏற்றிருப்பதாகவும் எவ்வித காரணம் கொண்டும் மேற்படி திட்டத்தை நிறுத்த முடியாதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரதிநிதிகளாகிய தங்களின் வேலைத்திட்டத்திற்கு மேலாக எந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் செயற்பாட்டிற்கும் அங்கீகாரம் அளிக்க முடியாதென்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனி நபர்களோ, அமைப்புகளோ அரசாங்க பாடசாலைகளுக்கு உதவி வழங்க தேவை என்றால் மாகாண கல்வி அமைச்சின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments