Ticker

6/recent/ticker-posts

ஹிந்த் ரஜப்: தீராத கண்ணீரும்... தீர்க்கப்படும் கணக்குகளும்!


ஹிந்த் ரஜப்: தீராத கண்ணீரும்... தீர்க்கப்படும் கணக்குகளும்!🤲

காசாவில், சுற்றிலும் தன் குடும்பத்தினரின் உடல்களுக்கு நடுவே, பயந்து நடுங்கியபடி உலகத்திடம் உதவி கேட்டு அலறிய அந்த 6 வயதுச் சிறுமி ஹிந்த் ரஜபின் மரணக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
🔸
சிறுமி ஹிந்த் ரஜப் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான இஸ்ரேலின் 401-வது கவசப் படைப்பிரிவின் (401st Armoured Brigade) 52வது படையணியின் தலைமைகளைத் தேடித்தேடி லெபனானின் ஹிஸ்புல்லாஹ் எதிர்ப்புப் படையினர் தற்போது வீழ்த்தி வருகின்றனர்.
🔸
இதனை இஸ்ரேலிய ஊடகமான 'தி டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்' (The Times of Israel) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது:
கர்னல் மெயர் பிடர்மன் (Colonel Meir Biderman) கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்கனவே படுகாயமடைந்துள்ளார்.
🔸
லெபனானின் 'க்ஃபர் தெப்னீத்' (Kfar Tebnit) கிராமத்தில் ஹிஸ்புல்லாக்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில், அதே படையணியின் 52-வது பட்டாலியன் தளபதியான லெப்டினன்ட் கர்னல் டோர் கதாலியா (Lt. Col. Dor Gdalia / Ben Simhon) பயணம் செய்த டாங்க் (Tank) முற்றிலும் அழிக்கப்பட்டது.
🔸
இத்தாக்குதலில் அந்த டாங்கிற்குள் இருந்த தளபதி டோர் கதாலியா உட்பட 4 இஸ்ரேலிய இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments