Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனான் எல்லைப்பகுதியில் தாக்குதல்

லெபனான் எல்லைப்பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் படையினர் இடையே நடந்த சண்டையில் ஐநா அமைதிப்படையைச் சேர்ந்த ஒருவர் உள்பட மூவர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் வீசிய ஏவுகணை, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை தாக்கியதில் இரு ராணுவ வீரர்கள் மற்றும் ஸ்பெயினைச் சேர்ந்த அமைதிப்படை உறுப்பினர் ஆகியோர் உயிரிழந்ததாக ஐநா செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அடையாளப்படுத்தப்படாத சாதாரண வாகனத்தில் வீரர்கள் சென்ற போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், இதில் 7 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments