பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பாடசாலையில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்தது, உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசையும் உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட கொடூர சம்பவத்துக்கு காரணமான 7 பேர் மீது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இன்று இவ்வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களை தவிர்த்து கராச்சியில் 2011 ஆம் ஆண்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ தளபதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
dailythanthi.com

0 Comments