யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில், உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன கூறியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் நம்பகத் தன்மையுடன் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தண்டனை வழங்கவும் தயாராக இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற ரீதியில், எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வதற்கு இடைத்தரகர்களாக செயற்படுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 Comments