Ticker

6/recent/ticker-posts

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியரசு தின விழாவில் கலந்துக்கொள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லி வந்திருந்த போதே, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாகவும், அப்போது கடுமையான பாதுகாப்பு நடவைக்கையின் காரணமாக அவர்களால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது என்றும் உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதைத் தவறவிட்ட தீவிரவாதிகள் இப்போது பிரதமரின் இல்லம் மட்டுமின்றி நாடாளுமன்ற வளாகம் மற்றும் டெல்லியின் முக்கிய இடங்களிலும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு உள்ளனர் என்றும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Post a Comment

0 Comments