முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் தன்னை நியமிக்குமாறு யோசித்த ராஜபக்ச வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளதாக ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யோசித்த ராஜபக்ச தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைத்த முறைபாடு தொடர்பாக பி.பி.சி செய்தி சேவைக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் ருவான் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த முறைபாடு தொடர்பாக ஏற்கனவே கடற்படை தளபதியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எனினும் யோசித்த ராஜபக்ச எவ்வாறு கடற்படையில் இணைந்துக்கொண்டார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்

0 Comments